அடுத்தடுத்து கொலைகள்... தவெக அரசு என்ன செய்கிறது? கனிமொழி எம்பி கேள்வி!
நெல்லை – தென்காசி பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் தொடர்பாக தவெக அரசிடம் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்
நெல்லை – தென்காசி பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் தொடர்பாக தவெக அரசிடம் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்காசியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இளைஞர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள மக்களவை எம்பி கனிமொழி, “தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பொட்டல்புதூரில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை–தென்காசி பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைகள், மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தவெக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, நேற்று இரவு சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தவெக நிர்வாகி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள தென்காசி கொலை சம்பவத்தால் எதிர்க்கட்சியினர் தமிழக அரசின் சட்ட - ஒழுங்கு நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Summary
MP Kanimozhi has questioned the TVK government regarding the series of murders taking place in the Nellai–Tenkasi region.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




