திமுக - அதிமுக இணைய வாய்ப்பிருப்பதாக தவெக அமைச்சரின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது, "இதுவரையில் மத்திய அரசை எதிர்த்து தவெகவினரோ முதல்வரோ எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதித் தொகையையும் மாநில உரிமைகளையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய சுரங்கங்கள், கனிமங்கள் மசோதா இரு நாள்களுக்கு முன்னதாக எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டது. இதனைப் பற்றிக்கூட தவெக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பாஜக அரசை எதிர்ப்பதாக வெறும் வார்த்தையாக மட்டுமே தவெகவினர் கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டை பாதிக்கக்கூடிய பிரச்னைகளைக்கூட எதிர்த்து எதுவுமே பேசுவதில்லை.
திமுகவும் அதிமுகவும் இணைவதாகக் கூறுவது அவர்களின் கனவாக வேண்டுமானால் இருக்கலாம். நிச்சயமாக அதற்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை.
தமிழ்நாடு முழுவதுமே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குக்கூட் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
குறிப்பாக, தங்கள் கட்சியில் (தவெக) உள்ள நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்தப்படும்போது, அவர்களைப் பாதுகாப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைப்பதே இல்லை" என்று தெரிவித்தார்.
Summary
MP Kanimozhi responds to a TVK's remarks about a potential DMK-AIADMK alliance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உதயநிதி கைது; தவெக அரசின் கோழைத்தனம்: கனிமொழி கண்டனம்

‘நீட்’ விவகாரத்தில் தவெக அரசு மௌனம் - கனிமொழி விமா்சனம்
அணுக்கனிம சுரங்கம்! மக்களுக்கு தவெக துரோகம்! கனிமொழி கண்டனம்
எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது ஜனநாயக தவெக அரசு! கனிமொழி
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


