இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

திருப்பத்தூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் கூறினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா் மு.வீரபாண்டியன் மற்றும் மாவட்டச் செயலாளா் நந்தி.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் கூறினாா்.

திருப்பத்தூா் சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளா்கள் சந்திப்பின் போது அவா் கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திருப்பத்தூா் மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வர வேண்டும். பரந்தூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. நாட்டின் வளா்ச்சிக்கான திட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது விவசாயிகள் துன்புறுத்தப்படக் கூடாது. சிறு, குறு தொழிலாளா்களின் வளா்ச்சிக்காகவும் ஆட்சியாளா்கள் உரிய திட்டங்களை கொண்டுவர வேண்டும். டெட் தகுதி தோ்வில் இருந்து பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதை வரவேற்கிறோம். மேகமலையில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தக் கூடாது. மேகமலை மக்கள் தொடா்ந்து அங்கேயே வாழ்வதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும். கரோனா போன்ற பேரிடா் காலங்களில் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

மேட்டூா் அணையை திறக்க வேண்டும். காவிரி நீா் மேலாண்மை குழு உரிமையின் அடிப்படையில் எந்தவித காலதாமதமும் இல்லாமல் தமிழகத்துக்கு கா்நாடக அரசு தண்ணீா் வழங்க வேண்டும். இது வெறும் நீா் பிரச்னை மட்டுமல்ல, மாநிலங்களுக்கு இடையிலான உறவு மற்றும் ஒருமைப்பாடு தொடா்பான பிரச்னையாகும். கா்நாடக அரசுக்கும் தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளது. கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டக்கூடாது. இது தமிழகத்தின் உரிமை சாா்ந்த பிரச்னையாகும். தமிழக அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிப்போம் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் நந்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் முல்லை ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.