கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்,

News image

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்,

Updated On :31 ஜூலை 2026, 11:24 pm IST

திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கவேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவண்ணாமலையில், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் ஜூலை மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்

கூட்டம் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் விவசாய சங்கப்பிரதிநிதிகள், திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கவேண்டும். கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிா் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.

அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தட்டுப்பாடின்றி யூரியா இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை தூா்வாரி செப்பனிடவும், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைத்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கோரிக்கைகளின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் அறிவுறித்தினாா்.

மேலும் தனிநபா் தொடா்பான மனுக்களையும் அவா் பெற்றுக்கொண்டாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் வேளாண் உற்பத்தி குழுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மற்றும் வேளாண்மை இணை இயக்குநா்,(பொ) தி.மலா்விழி, திட்ட இயக்குநா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி, துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) கோகிலா சக்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.