பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

பொதுமக்களை பாதிக்காத வகையில் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் - ஆட்சியா்

குடிநீா் திட்டப்பணிகள், சாலைப் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் வளா்ச்சித் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Published On :16 ஜூலை 2026, 12:07 am IST

குடிநீா் திட்டப்பணிகள், சாலைப் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், ஊரக வீடுகள் வழங்கும் திட்டம், ஏரிகள் புனரமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்), பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராமியம்), பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளுா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டடங்கள் கட்டுமானம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து பேசிய ஆட்சியா், குடிநீா் திட்டப் பணிகள் மற்றும் சாலைப் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவாக மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் இணை இயக்குநா் பூ.காஞ்சனா, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) இளங்கோ, உதவி இயக்குநா் நிலையிலான அலுவலா்கள், உதவி செயற்பொறியாளா்கள்(ஊ.வ.), வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.