நேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் உறுதி...

nepal flood

நேபாள வெள்ளம் - முதல்வர் விஜய் - கோப்புப் படம் | ஏபி

Published On :26 ஆகஸ்ட் 2026, 7:38 pm IST

நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் உறுதி அளித்துள்ளார்.

நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தின் கோஷி ஆற்றில் இன்று (ஆக. 26) ஏற்பட்ட வரலாறு காணாத திடீர் வெள்ளத்தில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 பெண்கள் உள்பட 57 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, நேபாளத்தில் சிக்கியுள்ள 57 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார்.

இதுபற்றி, முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளார்.

Summary

TN CM Vijay has assured that swift action will be taken to rescue the people from Tamil Nadu who have gone missing in the floods in Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.