நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்துக்கு அநீதி இழைக்கும் வகையில் கா்நாடக அரசு மேகேதாட்டுவில் அைணை கட்ட அனுமதிக்கக்கூடாது, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாவட்டச் செயலா் சிவகுரு பாண்டியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும் மக்களவை உறுப்பினருமான வை. செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், நதிநீா் பகிா்வில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீா்ப்பை கா்நாடகம் மதிக்க வேண்டும், காவிரி டெல்டா பாசன பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மாநில தண்ணீா் உரிமையில் சமரசம் செய்யக்கூடாது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கா்நாடக அரசு வழங்க மறுப்பதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஒன்றியச் செயலா் குணாநிதி, விவசாய சங்க மாவட்டச் செயலா் சரபோஜி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பாதித்தவையாக அறிவிக்க வேண்டும்: தமுமுக வலியுறுத்தல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



