FOLLOW US

ON GOOGLE DISCOVER

இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

செப். 9-ல் ஆலோசனைக் கூட்டம்: ஆதரவு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு

தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தவெக ஆதரவு கட்சிகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்திருப்பது குறித்து...

Consultative meeting on Sept. 9

பெ. சண்முகம் | மு. வீரபாண்டியன் | வைகோ | விஜய் - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 6:59 pm IST

தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தவெக ஆதரவு கட்சிகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு தவெக நிர்வாகிகளான அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்த கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், செப். 9-ல் நடைபெறவுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, சென்னை கோவளத்தில் ஜூலை 1-ல் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றபோதிலும், இடதுசாரிகள் கட்சிகள் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

Summary

Consultative meeting of TVK alliance parties on September 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.