
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய்
மும்பை: அதிகரித்து வரும் அந்நிய முதலீட்டு வரத்து உள்ளிட்டவையால் ஏற்பட்ட சாதகமான சூழலால், இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிலைபெற்றது.
வலுவான அந்நிய மூலதன வரத்தும் மற்றும் ரிசர்வ் வங்கியின் தீவிர தலையீடும் ரூபாயின் மதிப்பை வலுவடைய வைத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றங்கள் ரூபாயின் உயர்வை சற்று கட்டுப்படுத்தியது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 94.53 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 94.46 என்ற நிலையிலும் குறைந்தபட்சமாக ரூ. 94.53 வரையிலும் சென்றது. முடிவில், முந்தைய நாள் வர்த்தகத்தை விட 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவடைந்தன.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) தொடர்ந்து ஐந்தாவது அமர்வாக ரூபாய் மதிப்பு உயர்ந்தது 22 காசுகள் அதிகரித்து டாலருக்கு நிகராக ரூ. 94.51 ஆக நிலைபெற்றது.
Summary
The rupee settled for the day higher by 2 paise at 94.49 against the US dollar on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






