மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!

சென்செக்ஸ் 362.57 புள்ளிகள் உயர்ந்து 76,515.43 புள்ளிகளாகவும், நிஃப்டி 24.25 புள்ளிகள் உயர்ந்து 23,897.70 ஆக நிறைவு.

கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 5:34 pm IST

மும்பை: உலகளாவிய பங்குச் சந்தையின் ஏற்றம் அதே வேளையில் தனியார் வங்கி, எண்ணெய் & எரிவாயு உள்ளிட்ட சில துறைப் பங்குகளில் முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்ததால், கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்த சரிவுப் போக்கை முறியடித்து கொண்டு, சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்தது நிறைவடைந்தன.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 362.57 புள்ளிகள் உயர்ந்து 76,515.43 என்ற நிலையில் நிறைவடைந்தன. இதில் 20 பங்குகள் உயர்ந்தும் மீதமுள்ள 10 பங்குகள் சரிந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 730.28 புள்ளிகள் உயர்ந்து 76,883.14 என்ற உச்சத்தைத் எட்டியது.

நிஃப்டி குறியீடு 24.25 புள்ளிகள் உயர்ந்து 23,897.70 என்ற நிலையில் நிறைவடைந்தன. வர்த்தகத்தின் பெரும்பகுதி நேரத்தில் இந்த குறியீடு ஏற்றத்துடன் காணப்பட்டதுடன் 24,000 என்ற அளவைக் கடந்து அதிகபட்சமாக 24,005.75 புள்ளிகள் வரை உயர்ந்தன.

சென்செக்ஸில் டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ட்ரெண்ட், அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் பார்தி ஏர்டெல், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மாசூட்டிகல்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் மாருதி சுஸுகி இந்தியா ஆகிய பங்குகள் சரிந்தன.

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த அச்சம் முதலீட்டாளர்களிடம் தணிந்ததால், இந்தியப் பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு காணப்பட்டது. இருப்பினும், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்த அதே வேளையில் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் காரணமாக சந்தை ஏற்றம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.

உள்நாட்டுச் சந்தையைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட துறையில் பங்குகளை கொள்முதல் செய்தனர். குறிப்பாக ஸ்மால்-கேப் குறியீடுகள் வர்த்தகத்தின் போது புதிய உச்சத்தை எட்டியது. வலுவான வருவாய் வளர்ச்சி, மீள்தன்மை கொண்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் உறுதியான உள்நாட்டுத் தேவை ஆகியவை முதலீட்டளர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து வலுப்படுத்தியது.

ஆசிய சந்தையில், ஹாங்காங்கின் ஹேங் செங் 1.74 சதவீதம் உயர்ந்ததும், தென் கொரியாவின் கோஸ்பி 1.64 சதவீதமும் மற்றும் ஜப்பானின் நிக்கி 225 1.28 சதவீதம் உயர்வுடன் வர்த்தகமான நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு 0.30 சதவீதம் சரிவுடன் நிறைவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 2,345.87 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். இருப்பினும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாகவே இருந்ததால் ரூ. 4,977.46 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஐரோப்பிய சந்தை பெரும்பாலும் மாற்றமின்றி வர்த்தகமானது. அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (வியாழக்கிழமை) 1 சதவீதத்திற்கும் மேல் உயர்வுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.40 சதவீதம் சரிந்து 95.14 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Benchmark BSE Sensex rebounded by 362 points on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.