மும்பை: மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 555.5 புள்ளிகள் சரிந்து 77,453.75 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 281.09 புள்ளிகள் சரிந்து 77,728.16 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 78.35 புள்ளிகள் சரிந்து 24,287.65 புள்ளிகளாக நிலைபெற்றது. இதன் மூலம் பங்குச் சந்தை தொடர்ந்து 5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்தன.
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், சன் பார்மா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா மற்றும் ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் இன்ஃபோசிஸ், சன் பார்மா, எச்.சி.எல் டெக், நெஸ்லே, டி.சி.எஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி லைஃப் மற்றும் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு மாற்றமின்றி முடிவடைந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 0.36 சதவீதம் உயர்ந்தன. துறைசார் குறியீடுகளைப் பொறுத்தவரை, தகவல் தொழில்நுட்பக் குறியீடு கிட்டத்தட்ட 2% சரிந்த நிலையில் உலோகக் குறியீடு 1.2 சதவீதமும் மற்றும் ரியல்டி குறியீடு 1.5 சதவீதமும் உயர்ந்தன.
அமெரிக்கா-ஈரான் மோதல் தொடர்பான தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததும் முதலீட்டாளர்களை பங்குச் சந்தையிலிருந்து ஒதுங்கியிருக்கச் செய்தது. இதனால் கடந்த வாரத்தின் எச்சரிக்கை போக்கு இன்றும் தொடர, இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்வுடன் நிறைவடைந்தன. விடுமுறை காரணமாக தென் கொரியப் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் இன்று கலவையான போக்கிலும், வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.
பி.டி.சி இண்டஸ்ட்ரீஸ், கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ், நியூலேண்ட் லேப், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், அஜந்தா பார்மா, போஷ், ஆந்தம் பயோசயின்சஸ், எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 140 க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தைத் எட்டியது. மறுபுறம் ஐ.டி.சி, கே.இ.சி இன்டர்நேஷனல், பிராக்டர் அண்ட் கேம்பிள் ஹைஜீன் அண்ட் ஹெல்த் கேர், ஆதித்யா பிர்லா லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் 52 வாரக் குறைந்தபட்ச நிலையை எட்டியது.
உலகளாவிய பிரெண்ட் க்ரூட் கச்சா எண்ணெய் 1.11 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 89.50 டாலராக உள்ளது.
Summary
Benchmark indices Sensex and Nifty ended lower on Monday amid rising crude oil prices.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!
சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!
சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK




