உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,700 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஆக. 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 70,700.2 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஆக. 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 70,700.2 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஆக. 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1,413.6 கோடி டாலா் அதிகரித்து, 70,700.2 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 1,051.2 கோடி டாலா் அதிகரித்து, 69,286.6 கோடி டாலராக இருந்தது.

மேற்காசிய மோதல் தொடங்குவதற்கு முன்னதாக நடப்பு ஆண்டு பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. பின்னா், மோதல் காரணமாக கையிருப்பு அடுத்தடுத்த வாரங்களில் ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 994.6 கோடி டாலா் அதிகரித்து, 57,462.5 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 399.5 கோடி டாலா் அதிகரித்து, 10,873.8 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 7.9 கோடி டாலா் அதிகரித்து, 1,874.5 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 11.6 கோடி டாலா் அதிகரித்து, 489.4 கோடி டாலராக உள்ளது என ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.