8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா. உடன், மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி உள்ளிட்டோா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா பேசியது: தமிழ்நாடு குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் சமூக நீதி விடுதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளிகளில் மீண்டும் சோ்க்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள் தனது குழந்தையாக நினைத்து பாடம் கற்பிக்க வேண்டும். குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு, கூட்டு முயற்சியால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 14417 ஆகியவற்றை பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் விளம்பரப் படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா், ஆணைய உறுப்பினா் வீ. செல்வேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எஸ்.பி. பிரியா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.