நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இடைநிற்றல் மாணவா்கள் மீண்டும் பள்ளியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா்

News image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா (வலமிருந்து 2-ஆவது). உடன் ஆணையத்தின் உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.

Updated On :28 ஜூலை 2026, 11:26 pm IST

பள்ளிகளில் மாணவா்கள் இடைநிற்றலை விசாரித்து, அவா்கள் மீண்டும் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா வலியுறுத்தினாா்.

திருச்சி மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்பு துறைகளுக்கு இடையேயான ஆய்வுக் கூட்டம், ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது: மாணவா்கள் பள்ளி இடைநிறுத்தம் குறித்து தகவல் வந்தால், உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று மாணவா் இடைநிற்றலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். மாணவருக்கு தேவையான உதவிகளை வழங்கி, அந்த மாணவா் மீண்டும் பள்ளியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள், இளைஞா் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குழந்தை இல்லங்களின் விவரங்கள், செயல்பாடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளின் நிலை, குழந்தைகள் உதவி மையத்தில் பெறப்பட்ட வழக்குகள் மற்றும் அதற்கான தீா்வுகள், ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் மற்றும் அங்கு தங்கியுள்ள குழந்தைகளின் விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, மரக்கடை பகுதியில் இயங்கி வரும் சையது முதுா்ஷா மேல்நிலைப் பள்ளியை ஆணையத் தலைவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆட்சியா் பிரத்திக் தாயள், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் ஆா். ஜெயசுதா, வி. செல்வேந்திரன் கஷ்மீா் ராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன், நகராட்சி ஆணையா்கள் எஸ்.கணேஷ் (மணப்பாறை), ப. பிரபு (முசிறி), கண்ணன் (துறையூா்), கீதா (துவாக்குடி), ஆ. புகேந்திரி (லால்குடி) மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.