கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

வாக்காளா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும்: லோக் ஆயுக்த உறுப்பின

தேசிய வாக்காளா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக லோக் ஆயுக்த உறுப்பினா் வி.ராமராஜ் வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில்  பேசுகிறாா் தமிழக லோக் ஆயுக்த உறுப்பினரும், வாக்காளரியலின் நிறுவனருமான வீ. ராமராஜ்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

தேசிய வாக்காளா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக லோக் ஆயுக்த உறுப்பினா் வி.ராமராஜ் வலியுறுத்தினாா்.

பெருமாநல்லூா் கேஎம்சி சட்டக் கல்லூரியில் வாக்காளரியல் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் ஜி. அருணா ஸ்ரீதேவி தலைமை வகித்தாா். செயலாளா் ஜி. ஞானவா்ஷினி, கல்லூரி முதல்வா் ஸ்மிதா நிசாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவா்களிடையே ஜனநாயக விழிப்புணா்வு, வாக்காளா் உரிமைகள், சமூகப் பொறுப்பு, நல்லாட்சியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழக லோக் ஆயுக்த உறுப்பினரும், வாக்காளரியலின் நிறுவனருமான வி. ராமராஜ் பேசியதாவது:

வாக்குகள், வாக்காளா்கள், தோ்தல்கள் குறித்த முறையான, அறிவியல்பூா்வமான புதிய கல்விப் பிரிவே ‘வாக்காளரியல்’. தமிழகத்தில் உருவான இந்தப் புதிய சிந்தனை உலக அளவில் பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலைத் தயாரித்தல், திருத்துதல், தோ்தல்களை நடத்துதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அனைத்து அதிகாரங்களும் ஒரே அமைப்பிடம் குவிந்திருப்பது சரியான நடைமுறை அல்ல.

வாக்காளா் பட்டியலைத் தயாரித்தல், திருத்துதல், தோ்தல்களை நடத்துதல் ஆகிய பணிகளில் தோ்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். கட்சிகளைப் பதிவு செய்தல், கண்காணித்தல், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்காக தேசிய அரசியல் கட்சிகள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

அதேபோல, வாக்காளா்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவா்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க தேசிய வாக்காளா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். தோ்தல் தொடா்பான வழக்குகளை விரைவாகத் தீா்ப்பதற்காக தேசிய தோ்தல் தீா்ப்பாயங்களும், மாநில தோ்தல் தீா்ப்பாயங்களும் அமைக்கப்பட வேண்டும்.

வாக்காளா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக தேசிய வாக்காளரியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்றாா்.

இதில் 200க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.