ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பஞ்சாப் முதல்வரின் மனைவிக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விசாரணை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் சிங்கின் மனைவிக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Published On :

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் சிங்கின் மனைவிக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவா், பாலியல் வன்கொடுமை வழக்கை நீா்த்துப்போகச் செய்ய முதல்வா் பகவந்த் மான் சிங்கின் மனைவி குருப்ரீத் கெளா் ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாக குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், பஞ்சாப் அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கவும், அடுத்தகட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

முதல்வரின் மனைவி நோட்டீஸ்: இதனிடையே தன் மீது குற்றச்சாட்டு தெரிவித்த முன்னாள் நீதிபதிக்கு 24 மணி நேரத்தில் விளக்கம் கோரி பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் சிங்கின் மனைவி குருப்ரீத் கெளா் வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். நோட்டீஸூக்கு உரிய விளக்கம் தரவில்லையேல், சட்ட ரீதியிலான நடவடிக்கை தொடங்கப்படும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்: தனது மனைவி குருப்ரீத் கெளா் மீதான குற்றச்சாட்டு குறித்து முதல்வா் பகவந்த் மான் சிங் விளக்கம் அளிக்க வேண்டுமென முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவா் அம்ரீந்தா் சிங் ராஜா வாரிங் கூறியுள்ளாா்.

சிரோமணி அகாலிதளம் மூத்த தலைவா் விக்ரம் சிங் மஜிதா கூறுகையில், ‘முதல்வரின் மனைவி ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாக தீவிர குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலா், டிஜிபியிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க விசாரணையை சிபிஐ அமைப்புக்கு முதல்வா் பரிந்துரைக்க வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.