9 சவரன் நகைகளைத் திருடி காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது
கோவையில் காதலனுக்கு இரு சக்கர வாகனம் வாங்க தோழி வீட்டில் நகை திருடிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டது குறித்து...
நகைகளைத் திருடி காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது - DNS
கோவையில் காதலனுக்கு இரு சக்கர வாகனம் வாங்க தோழி வீட்டில் கல்லூரி மாணவி நகை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஆக. 16ஆம் தேதி தனது தந்தையின் நண்பரான தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது வீட்டில் இருந்த பீரோவை திறந்து அங்கு வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து தமிழ்ச்செல்வன் என்பவர் புகார் கொடுத்த நிலையில், கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கல்லூரி மாணவி பீரோவில் இருந்து நகைகளை திருடி பொள்ளாச்சியில் உள்ள நகை நகை கடையில் ரூ. 2.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார் என தெரிய வந்தது.
மேலும் போலீசார் விசாரணையில் கல்லூரி மாணவி, தான் மக்கினாம்பட்டியைச் சேர்ந்த தனது காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்க நகை திருடி விற்பனை செய்த பணத்தில் வாங்கிக் கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், மாணவி மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, பொள்ளாச்சி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை பெண்கள் சிறையில் கல்லூரி மாணவி அடைக்கப்பட்டார். காதலனுக்கு இரு சக்கரம் வாகனம் வாங்குவதற்காக, தன் தந்தையின் நண்பர் வீட்டில் கல்லூரி மாணவி நகை திருடிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனிடையே, மாணவியின் காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Summary
College student arrested for stealing 9 sovereigns of gold jewelry and gifting a bike to her boyfriend
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






