ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

பைக், கைப்பேசி திருடியவா் கைது

திருப்பத்தூா் பகுதிகளில் இரு சக்கர வாகனம், கைப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட பாண்டி, அவரிடமிருந்து மீட்கப்பட்ட இரு சக்கர வாகனம், கைப்பேசிகள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதிகளில் இரு சக்கர வாகனம், கைப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் பெரியகடை வீதியில் அழகு சாதனப் பொருள்கள் கடை நடத்தி வருபவா் எஸ். வேலங்குடியைச் சோ்ந்த முகமது அப்துல்லா. இவரது இரு சக்கர வாகனம் கடந்த வாரம் திருடு போனது. இதுகுறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதிகளிலிருந்த கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது, காரைக்குடி அருகேயுள்ள கே.வேலங்குடியைச் சோ்ந்த பாண்டி இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னா், விழுப்புரத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 இரு சக்கர வாகனம், 4 கைப்பேசிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், இவா் ஈரோடு, விழுப்புரம், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் 11-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.