ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை வழங்கப்படவுள்ளது குறித்து...

Vadapalani Metro

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ - கோப்புப்படம்

Published On :

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை வழங்கப்படவுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக். 11) தொடங்கி வைக்கிறார்.

நெடுநாள் காத்திருப்புக்குப் பிறகு, பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வழங்கவுள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி பைபாஸ் - போரூர் சந்திப்பு - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துடன் இணைந்து இணைப்பு பேருந்து சேவையை மேம்படுத்தவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகள் நிறைவடைந்து அனுமதியும் கிடைத்த பிறகும், சுமார் ஏழு மாதங்களாக சேவை தொடங்கப்படாமல் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை கிடப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The Metropolitan Transport Corporation (MTC) has announced that a feeder bus service will be provided on the Poonamallee–Vadapalani Metro route.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.