கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கைசிபிஎஸ்இ வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் ரகசியம் பற்றி தெரியுமா?திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!சபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டுதிருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? என்றும், அவரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல்.

TVK MLA from Kallakurichi

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் - கோப்புப் படம்

Updated On :

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்படுவாரா? அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் ஆட்சியருக்குத் தவறான குறுந்தகவல் அனுப்பிய குற்றச்சாட்டில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, கள்ளக்குறிச்சி மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு சம்மன் அளித்துள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கள்ளக்குறிச்சி மகளிர் காவல்துறையினர் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

சம்பவத்தின் பின்னணி!

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடா்பாக பெண் ஆட்சியர் முறைப்படி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து எம்எல்ஏவிடம் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினா்.


மறுத்த அமைச்சர்கள்!

பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ., அருள் விக்னேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதை ஆட்சியா் மறுக்காத நிலையில், எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்தன.

ஆனால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உரிய புகாா் வராததால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காவல் துறை தெரிவித்தது. மேலும் எம்எல்ஏ அருள் விக்னேஷும் தாம் எந்த ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என்று மறுத்துவந்தாா். ஆளும் கட்சியைச் சோ்ந்த அமைச்சா்களும் மறுத்து வந்தனா்.


நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகள் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Has Arul Vignesh from the Kallakurichi hills been arrested? A twist emerges.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.