திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கைசிபிஎஸ்இ வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் ரகசியம் பற்றி தெரியுமா?திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!சபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டுதிருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? என்று உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்.

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை - from video grab

Updated On :

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படாதது ஏன்? என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இன்று நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுளள்து.

மேலும், மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கு ஏற்றப்படாதது குறித்து நான் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் மாவட்ட ஆட்சியர் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படாதது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், உரிய நேரத்தில், தூண் இருக்கும் பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோயில் அறங்காவலர் குழுவிடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் தூண் பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.

மாவட்ட நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் கோயிலின் அறங்காவலர் குழு, வழக்கமாக விளக்கேற்றப்படும் இடத்திலேயே தொடர்ந்து விளக்கேற்ற ஒருமனதாகத் தீர்மானித்ததாகவும் மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தூணில் விளக்கேற்றுவதற்கு எவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாக, தேவஸ்தானம் தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியரிடம் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கார்த்திகைத் தீபத்தன்று, மலை மீது விளக்கேற்றும் வகையில், மாலை 3 மணி வரை அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டு, சட்டம் - ஒழுங்கு பேணப்பட்டது. இதற்காக 5,797 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால், மலை மீதுள்ள தூணில் விளக்கேற்றுங்கள் என்று, கோயில் அறங்காவலர் குழுவிடம் வலியுறுத்த எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எனவே, தூணில் தீபத்தை ஏற்ற முடியவில்லை என்று நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவையும் நான் வேண்டுமென்றே மீறவில்லை. இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் உத்தரவுகளை நான் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறேன் என்று மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலைமீதிருக்கும் தூணில் விளக்கேற்றுவது தொடர்பான வழக்கில், கார்த்திகை தீபத்தன்று ஒரே ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டு, பல்வேறு நிபந்தனைகளையும் பிறப்பித்திருந்தது.

நவ. 25ஆம் தேதி திருப்பரங்குன்றம் தூணில் விளக்கு ஏற்றப்பட்டது குறித்த அறிக்கையையும் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று, தீபம் ஏற்றப்படாதது ஏன் என்பது குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Summary

Why was a lamp not lit on the pillar at Tirupparankundram? Madurai District Collector submits report to the Supreme Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.