
தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பில்லை! மார்க்சிய கம்யூ. அறிவிப்பு!
தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பில்லை என சிபிஎம் அறிவித்திருப்பது பற்றி...
முதல்வர் விஜய் | மார்க்சிஸ்ட் கம்யூ. செயலர் பெ. சண்முகம் - கோப்புப் படம்
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னையில் நாளை (செப். 9) நடைபெறவுள்ளது. இதையொட்டி தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முதல் கூட்டத்தில் இவ்விரு கட்சிகளும் கலந்துகொள்ளாத நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இரு கட்சிகளின் நிர்வாகிகளும் இன்று தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தவெக கூட்டணி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும் தலைமைக் குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:
“தவெக அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம்பெறப் போவதில்லை என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெளிவாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலையில் ஒரு ஆட்சி அமையாமல் போய்விடும் என்ற காரணத்தால்தான் தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம்.
திமுக, தவெக என எந்த கூட்டணியிலும் நாங்கள் இல்லை. இடதுசாரிக் கட்சிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளோம். நாங்கள் இணைந்து அடுத்த மாதத்தில் திருச்சியில் பேரணி நடத்தவுள்ளோம். நாங்கள் இணைந்து பயணிக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.
இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது போன்றவை குறித்து கட்சி கூட்டத்தில் ஆலோசித்து அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாளைய கூட்டத்தில் கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
Summary
No participation in TVK alliance meeting - CPIM announces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





