சட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய்
சட்டப்பேரவையில் பதிலுரையின்போது வெளிப்படுத்திய உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என விஜய் விளக்கம் அளித்துள்ளது குறித்து...

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசும்போது... - எக்ஸ்
சட்டப்பேரவையில் பதிலுரையின் இடையேயான தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதல்வர் சி. ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளதாவது:
''சட்டப்பேரவையில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
à®à®à¯à®à®®à®©à¯à®±à®¤à¯à®¤à®¿à®²à¯ 7.9.2026 à®à®©à¯à®±à¯ à®à®¾à®µà®²à¯à®¤à¯à®±à¯ மானிய à®à¯à®°à®¿à®à¯à®à¯à®¯à®¿à®²à¯, à®à®©à¯à®©à¯à®à¯à®¯ பதிலà¯à®°à¯à®¯à®¿à®©à¯ à®à®à¯à®¯à¯à®¯à®¾à®© à®à®©à®¤à¯ à®à®à®²à¯à®®à¯à®´à®¿ à®à®¤à¯à®à¯à®à¯à®¯à®¾à® வà¯à®³à®¿à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯à®¤à®¾à®©à¯ தவிர, à®à®¤à¯ à®à®µà¯à®µà®à¯à®¯à®¿à®²à¯à®®à¯ à®à®³à¯à®¨à¯à®à¯à®à®®à¯ à®à¯à®£à¯à®à®¤à®¿à®²à¯à®²à¯ à®à®©à¯à®ªà®¤à¯à®¤à¯ தà¯à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®³à¯à®à®¿à®±à¯à®©à¯. à®à®à®µà¯, தனிபà¯à®ªà®à¯à® à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ யார௠மனதà¯à®¯à¯à®®à¯ பà¯à®£à¯à®ªà®à¯à®¤à¯à®¤à¯à®à®¿à®± à®à¯à®¯à®²à®¾à® à®à®¤à¯â¦
— TVK Vijay (@TVKVijayHQ) September 8, 2026
சட்டப்பேரவையில் நேற்று (செப். 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள், கொலைகள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார்.
தொடர்ந்து மிசா குறித்துப் பேசும்போது, எதையோ சுட்டிக்காட்டுவதப்போன்று தனது உடல்மொழியை சற்று மாற்றிப் பேசியிருந்தார். மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட திமுக தலைவரைக் குறிப்பிட்டுப் பேசுவதாக சமூக வலைதளங்களில் பலர் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்களும் முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சு குறித்து விமர்சித்திருந்தனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் பதிலுரையின்போது வெளிப்படுத்திய உடல்மொழி எந்தவித உள்நோக்கமும் இல்லாதது என்றும், எதேச்சையானது எனவும் முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
Summary
The body language during the reply was spontaneous: Chief Minister joseph Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




