FOLLOW US

ON GOOGLE DISCOVER

விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்!

தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது குறித்து...

Chief Minister Vijay, CPI State Secretary M. Veerapandian

முதல்வர் விஜய், இந்திய கம்யூ மாநில செயலர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 6:50 pm IST

தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை (செப். 7) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.

உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், எண்ணெய், அரிசி, சர்க்கரை ஆகியவை 20 சதவீதத்திலிருந்து 35 சதவீதம் வரை உயர்ந்து விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் இத்தகையப் பொருட்கள் பதுக்கப்படுவதும், ஆன்லைன் வர்த்தக முறையில் நவீனமான பதுக்கல் நடைபெறுவதும், அரிசி, சர்க்கரை உள்ளிட்டவைகள் எத்தனால் உற்பத்திக்கு ஆலைகளுக்கு திருப்பி விடப்படுவதாலும் இந்த பற்றாக்குறை உருவாக்கப்பட்டு விலைகள் கடுமையாக உயர காரணமாகிறது என சுருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையிட்டு, பதுக்கலை தடுக்கவும், நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு, மக்களுக்கு பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The Communist Party of India urged on Monday (Sept. 7) that measures be taken to curb the rise in the cost of living in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.