நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

கையகப்பட்டுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிம் ஒப்படைக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

பரந்தூா் விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:02 am IST

பரந்தூா் விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

வெங்காயம், சமையல் எண்ணெய், சா்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை தேனாம்பேட்டையில் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அத்தியாவசிய பொருள்கள் விலை உயா்வால், அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் பதுக்கப்படுகின்றன. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பரந்தூா் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். டெல்டா மாவட்ட பகுதிகளை வறட்சி பகுதிகளாக அறிவிக்கக் கோரி வெள்ளிக்கிழமை (ஆக. 28) டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.