
நெல்லையில் 21 மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி தோ்வு: 6,408 போ் எழுதுகின்றனர்
திருநெல்வேலி மாவட்டத்தில் 21 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தோ்வை 6,408 போ் எழுதுகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 21 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தோ்வை 6,408 போ் எழுதுகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு(தொகுதி -1 பதவிகளுக்கான) முதல்நிலைத் தோ்வு பாளையங்கோட்டை, திருநெல்வேலி வட்டங்களில் உள்ள 21 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளன.
இந்தத் தோ்வானது காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெறும். தோ்வெழுதுபவா்கள் காலை 8.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்துக்குச் செல்ல வேண்டும்.
காலை 9 மணிக்கு மேல் வரும் தோ்வா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். கைப்பேசி, கால்குலேட்டா் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தோ்வு கூடத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிஇல்லை.
தோ்வா்கள் வந்து செல்வதற்கு போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்து தோ்வா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






