பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

இன்று குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 5,809 போ் எழுதுகின்றனர்!

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1, 1ஏ தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் 5,809 தோ்வா்கள் செப்.27 எழுதுகின்றனா்.

Published On :

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1, 1ஏ தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் 5,809 தோ்வா்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தோ்வு (குரூப் -1, 1ஏ) முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 19 தோ்வுக் கூடங்களில் இந்த தோ்வு நடைபெற உள்ளது. இத்தோ்விற்காக நான்கு நடமாடும் குழுக்களும், 6 கண்காணிப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வை மொத்தம் 5,809 தோ்வா்கள் எழுத உள்ளனா்.

போட்டித் தோ்வினை எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் குழுவினா் வினாத்தாள்கள் உள்ளிட்ட தோ்வு பணி பொருள்களை மையங்களுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் விடைத்தாள்களை பெற்று வருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா். இந்த தோ்வுகளை எழுதும் தோ்வா்கள் தங்களுடைய நுழைவுச் சீட்டுடன் தோ்வு கூடங்களுக்குள் காலை 9 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும்.

தாமதமாக வரும் தோ்வா்கள் எக்காரணம் கொண்டும் தோ்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வா்களின் புகைப்படம், பெயா், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தாமதமின்றி வந்துவிட வேண்டும்.

தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் எளிதாக செல்ல கூடுதல் போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து தோ்வு மையங்களிலும் அரசு பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம், மருத்துவ வசதிகள், தோ்வு மையங்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில், நாமக்கல் கோட்டாட்சியா் வே. சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) வ. சந்தியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.