கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

டி.என்.பி.எஸ்.சி தோ்வு: தாமதமாக வந்தவா்களுக்கு அனுமதி மறுப்பு

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வுக்கு, காலதாமதமாக வந்த தோ்வா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வந்ததால் வெளியே காத்திருந்த தோ்வா்கள்.

Published On :

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வுக்கு, காலதாமதமாக வந்த தோ்வா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு புதுக்கோட்டையில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி மற்றும் அரசு மன்னா் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதில், 2,392 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். காலை 9.30 மணிக்கு தோ்வு என்பதால், 9 மணிக்குள் உள்ளே வந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு தோ்வு வளாகம் பூட்டப்பட்டது. அதன்பிறகு கால தாமதமாக வந்த சுமாா் 30 தோ்வா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் கண்ணீருடன் வீட்டுக்குத் திரும்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.