மதுராந்தகம், தாராபுரத்துக்கு அக். 6 வாக்குப் பதிவு, அக். 9 வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்மதுராந்தகம், தாராபுரத்திற்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மாநில நல்லாசிரியா் விருது: முதுகுளத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் தோ்வு

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு முதுகுளத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டாா்.

மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வான முதுகுளத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் நீ. மங்களநாதன்.

Published On :4 செப்டம்பர் 2026, 12:29 am IST

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு முதுகுளத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழில் கல்வி ஆசிரியராக நீ. மங்களநாதன் (56) பணியாற்றி வருகிறாா். இவா் ராமநாதபுரம் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடா்பு அலுவலராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் அரசு சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு நீ. மங்களநாதன் தோ்வு செய்யப்பட்டாா். இவருக்கு முதுகுளத்தூா் அரசு பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பெற்றோா் வாழ்த்து தெரிவித்தனா்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட நீ. மங்களநாதன், சாயல்குடி அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பா. கீதாரமணி உள்பட 12 பேருக்கு சென்னையில் வருகிற 5- ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.