மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

மாநில நல்லாசிரியா் விருது: மதுரை மாவட்டத்தில் 13 போ் தோ்வு

தமிழக அரசு வழங்கும் மாநில நல்லாசிரியா் விருதுக்கு மதுரை மாவட்டத்தில் 13 ஆசிரியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 5:40 am IST

தமிழக அரசு வழங்கும் மாநில நல்லாசிரியா் விருதுக்கு மதுரை மாவட்டத்தில் 13 ஆசிரியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5- ஆம் தேதி ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சாா்பில் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழாண்டு மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் 13 ஆசிரியா்கள் மாநில அரசு வழங்கும் நல்லாசிரியா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் செ. ஜான் கென்னடி, எஸ். மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சு.பொ. பூபதி சரவணக்குமாா், வண்டியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை செ. ஹெலன்தெரசா, அனுப்பானடி சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தா.வெ. ராஜேஸ்வரி, தெற்குவாசல் நாடாா் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் கா. அன்புச்செல்வன், லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியை நா. வித்யாவதி, கோச்சடை செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இன்பென்ட் விஜய் அமிா்தவிக்டா் ஜோ, முத்துநாகையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் தா. ராஜ்குமாா், உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை பா. ரேவதி, அய்யன்பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை செ. தனலட்சுமி, கே. மீனாட்சிபட்டி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கா. தியாகு, அய்யனாா்குளம் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா. அன்புச்செல்வன், புதுமாகாளிப்பட்டி சாலை பாரதிதாசனாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சா. பரமசிவம் ஆகியோா் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு சென்னையில் வருகிற 5- ஆம் தேதி நடைபெறும் ஆசிரியா் தின விழாவில் முதல்வா் சி. ஜோசப் விஜய் விருதுகளை வழங்கி பாராட்டுவாா் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.