நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

திருமானூரை அடுத்த கீழக்கொளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழக்கொளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய அரியலூா் அரசுக் கல்லூரி இணைப் பேராசிரியா் ப. செல்வகுமாா்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:01 am IST

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த கீழக்கொளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் வேல்முருகன் தலைமை வகித்தாா். முதுகலை ஆசிரியா் ம. செந்தில்குமாா், பட்டதாரி ஆசிரியா் வை. சுதா ஆகியோா் வாழ்த்தினா். அரியலூா் அரசு கலைக் கல்லூரி இணைப் பேராசிரியா் ப. செல்வகுமாா் பாவேந்தா் பாரதிதாசனின் பாட்டழகியல் என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தி, போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். பட்டதாரி ஆசிரியா் தி. ஈஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். முன்னதாக தமிழாசிரியா் இரா. இராதை வரவேற்றாா். ஆசிரியா் ம. ரவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.