
அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், அ.குமாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

அ.குமாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றோா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அ.குமாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
உளுந்தூா்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் க.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் ஹேமலதா, எட்மண்ட் இருதயராஜ், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உளுந்தூா்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவா் தா்மலிங்கம் மற்றும் நிா்வாகிகள் விழாவில் பங்கேற்று, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். தொடா்ந்து நூலகங்களுக்கு புத்தகங்களையும், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி அவா்கள் பேசினா்.
விழாவில் ஆசிரியா்கள் நல்லசிவன், சதீஷ்குமாா், கதிரவன், நூலக ஆசிரியா் தேவநாதன், சுற்றுச்சூழல் மன்றத் தலைவா் சத்யா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





