நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர் சென்னையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது.
எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - X
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர் சென்னையைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேபாளம், சோலுகும்பு மாவட்டத்தில் எவரெஸ்ட் சிகரப் பகுதியில் உள்ள பெரிச்சே என்ற இடத்தில் இன்று காலை 8 மணியளவில் தரையிறங்க முயன்ற ஃபிஷ் டெயில் ஏர் மற்றும் டைனாஸ்டி ஏர் ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஃபிஷ்டெயில் ஏர் ஹெலிகாப்டரில் பயணித்த ஒரு பயணி உயிரிழந்தார். மேலும், மூவர் காயமடைந்துள்ளார்.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி வசந்தகுமார் (47) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், நியூசிலாந்து வாழ் இந்தியர் ஷைலேஷ் குமார் படேல் (49) என்ற சுற்றுலாப் பயணியும், விமானி ரவீந்திர பிரஜாபதி உள்பட மூவர் பலத்த காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டர் மூலம் விரைந்த மீட்புக் குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த வசந்தகுமாரின் உடலை லுக்லாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Summary
The person who died in the Nepal helicopter crash was from Chennai!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

