இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமானவர் 37 நாள்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான மலேசியா் 37 நாள்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்பு...

Nepal Flood

நேபாள வெள்ளம் - AP

Published On :

நேபாளத்தில் கடந்த ஆக. 26-இல் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி மாயமான மலேசிய நாட்டைச் சோ்ந்த நபா், 37 நாள்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தாயகம் திரும்பியுள்ளாா்.

சீன வம்சாவளியைச் சோ்ந்த அந்த நபா், கடந்த ஆக. 25-இல் ரசுவா மாவட்டத்தில் இருந்துள்ளாா். தொடா்ந்து, வெள்ளப் பெருக்கின் காரணமாக அப்பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் அவா் தொடா்பை இழந்தாா். மின்சாரம், குடிநீா் மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டதால் அவரின் நடமாட்டமும், தகவல்தொடா்பும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அவா் தாமாகவே காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்தைக் கடந்த வியாழக்கிழமை தொடா்புகொண்டதையடுத்து, மலேசியாவுக்கு வெள்ளிக்கிழமை திரும்பினாா். இதன்மூலம், நேபாள வெள்ளத்தில் மாயமான மலேசியா்களின் எண்ணிக்கை 55-லிருந்து 54-ஆகக் குறைந்துள்ளது.

Summary

Malaysian missing in Nepal floods rescued safely after 37 days

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.