ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

உத்தரகண்ட்: கேதார்நாத்தில் மலைச்சரிவிலிருந்து விழுந்து நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பலி

கேதார்நாத்தில் மலைச்சரிவிலிருந்து விழுந்து நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பலியானது பற்றி....

கேதார்நாத் - கோப்புப்படம்.

Published On :

கேதார்நாத்தில் மலைச்சரிவிலிருந்து விழுந்து நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேதார்நாத் பகுதியில் உள்ள கோடா படவ் அருகே மலைச்சரிவிலிருந்து கீழே விழுந்த நேபாள நாட்டைச் சேர்ந்த நபர் பலியானதாக மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

இதில், ஹதினி பர்வதம் பகுதியில் சுமார் 80 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்திலிருந்து அந்த நபரின் சடலம் மீட்கப்பட்டது.

பலியானவர் நேபாளத்தின் ஹேமா கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான தன் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம், மேல் நடவடிக்கைக்காக மாவட்டக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Summary

A man of Nepali origin died after falling from a cliff near the 'Ghoda Padav' area of Kedarnath here on Saturday, the State Disaster Response Force (SDRF) said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.