
லக்னௌவுக்குத் திருப்பிவிடப்பட்ட ஃப்ளைதுபை விமானம்!
ஃப்ளை துபை விமானம் லக்னௌவுக்குத் திருப்பிவிடப்பட்டது பற்றி....

கோப்புப்படம்.
மோசமான வானிலை காரணமாக நேபாளத்திற்குச் செல்லவிருந்த ஃப்ளைதுபை விமானம் லக்னௌவுக்குத் திருப்பிவிடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
துபை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேபாளத்தின் பொக்காரா நோக்கிச் சென்ற அந்த விமானம், பொக்காரா விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாகத் திசை திருப்பப்பட்டது.
இதனையடுத்து, லக்னௌவில் உள்ள சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான விமான நிலையத்தில் சனிக்கிழமை மாலை 6.53 மணியளவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், இந்த விமானப் பாதை மாற்றம் முழுக்க முழுக்க மோசமான வானிலை காரணமாகவே மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்தவிதத் தொழில்நுட்பக் கோளாறோ அல்லது அவசர நிலையோ ஏற்படவில்லை.
விமானம் வழக்கமான முறையிலேயே தரையிறங்கியது எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பொக்காரா விமான நிலையத்தில் வானிலை சீரடைந்ததை அடுத்து, அந்த விமானம் இரவு 8.08 மணியளவில் லக்னௌவிலிருந்து மீண்டும் புறப்பட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தது.
Summary
A flydubai flight from Dubai to Nepal's Pokhara was diverted to Lucknow on Saturday evening due to adverse weather at the destination airport, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






