ஃப்ளைதுபை விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல்? திடுக்கிடும் தகவல்!
ஃப்ளைதுபை விமானத்தை இஸ்ரேல் படை சுட்டு வீழ்த்த தயாரானதாக தகவல்...

ஃப்ளைதுபை விமானம் - பிரதிப் படம்
ஃப்ளைதுபை விமானத்தை கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டால் நடுவானிலேயே அதனைச் சுட்டு வீழ்த்த இஸ்ரேல் படைத் தயாராக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த வாரம் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திய துணை விமானியான ஓமனைச் சோ்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி, விமானத்தை கீழே வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தபோதும் எதிா்த்துப் போராடி பயணிகள்-ஊழியா்கள் உதவியுடன் அந்த முயற்சியை இந்திய விமானி ஸ்மித் மச்சார் முறியடித்தாா்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
ஃப்ளைதுபை விமானத்தைச் சுடத் தயாரான இஸ்ரேல்
இஸ்ரேலைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்ததாக சிபிஎஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“ப்ளைதுபை விமானம் சில நொடிகளில் சுமார் 14,000 அடி கீழே சரிந்த நிலையில், இஸ்ரேல் விமானப் படையால் அந்த விமானிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை ஒரு சாத்தியமான விமானக் கடத்தலாக இஸ்ரேல் அதிகாரிகள் நினைத்தனர்.
9/11 பாணியிலான தாக்குதல் நடத்தக் கூடுமோ என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் எழுந்தது. உடனடியாக இஸ்ரேல் வான் எல்லை மூடப்பட்டு, போர் விமானங்கள் அனுப்பப்பட்டது. ஃப்ளைதுபை விமானத்தை இடைமறிக்கவும், தற்கொலைத் தாக்குதல் முயற்சி நடந்தால் சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், இஸ்ரேலுக்கு 400 மைல் தொலைவிலேயே அந்த விமானம் செளதி அரேபியா நோக்கிப் பறந்ததால், போர் விமானங்கள் திருப்பி அழைக்கப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாம் அல்-ஹம்மாமியின் வாக்குமூலம்
விமானக் கடத்தலில் ஈடுபட முயன்ற ஹமாம் அல்-ஹம்மாமியின் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விசாரணை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சரை கொன்றுவிட்டு, சந்தேகம் ஏதும் ஏற்படாத வகையில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு விமானம் தரையிறங்க அனுமதி பெற்றுவிட்டு, 9/11 தாக்குதலைப் போல விமான நிலையத்திலுள்ள ஒரு கட்டடம் அல்லது மற்றொரு விமானத்தின் மீது அந்த விமானத்தை மோதச் செய்ய திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தான், இந்த திட்டத்தை ஜூலையிலேயே நடத்தவிருந்த நிலையில், விமானி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுவிட்டதால் அதனை தள்ளிப்போட்டதாகவும் கூறியிருக்கிறாராம்.
பல முறை இஸ்ரேல் சென்றுவந்துள்ளதும், சதி திட்டத்தை நிறைவேற்றவே விமானியாக சேர்ந்ததும், சொந்த நாட்டிலேயே இவர் விமானியாக செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்ததும் இவரது சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் இவர் தீவிரவாத கருத்துகளைக் கொண்டிருந்தது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Summary
Was Israel ready to shoot down a Flydubai flight? Shocking information!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







