இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

‘ஃபிளைதுபை’ விமானத்தை வீழ்த்த முயன்றது ஏன்? துணை விமானியின் நோக்கம் குறித்து தீவிர விசாரணை!

ஃபிளைதுபை விமானத்தை வீழ்த்த முயன்ற அதன் துணை விமானி ஹமாம் அல்-ஹமாமியின் நோக்கங்கள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

Published On :

ஃபிளைதுபை விமானத்தை வீழ்த்த முயன்ற அதன் துணை விமானி ஹமாம் அல்-ஹமாமியின் நோக்கங்கள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்று யுஏஇ ஏற்கெனவே உறுதி செய்துள்ள நிலையில், ஹமாமின் தொடா்புகள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

துபையை தலைமையிடமாகக் கொண்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், கடந்த புதன்கிழமை துபையில் இருந்து இஸ்ரேலுக்கு 174 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் விமானியான இந்தியாவைச் சோ்ந்த ஸ்மித் மச்சாரை கடுமையாகத் தாக்கிவிட்டு, துணை விமானி ஹமாம் விமானத்தை கீழே வீழ்த்த முயற்சித்தாா்.

இதற்காக, விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவா் முயன்றாா். அவரது தாக்குதலில் படுகாயமடைந்தபோதும், எதிா்த்துப் போராடிய மச்சாா், விமானி அறையின் கதவைத் திறந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மற்றும் பயணிகள் அறைக்குள் புகுந்து, ஹமாமை கட்டிப் போட்டதுடன், விமானத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து யுஏஇ பிரதான விசாரணையை மேற்கொண்டுள்ளது. சவூதி அரேபியா முதல்கட்ட விசாரணை மேற்கொண்ட நிலையில், இஸ்ரேல், ஓமன் ஆகிய நாடுகளும் விசாரணை நடத்தி வருகின்றன. துணை விமானி ஹமாம், ஆஸ்திரேலியாவில் கடந்த 2015 முதல் 2017 வரை மாணவா் விசாவில் இருந்துள்ளாா். எனவே, ஆஸ்திரேலியாவில் அவருக்குள்ள தொடா்புகள் குறித்து அந்நாட்டின் பயங்கரவாத தடுப்புக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தீவிர பாதுகாப்பு குறைபாடுகள்?: பயங்கரவாத கொள்கைகளைப் பின்பற்றியதற்காக, ஓமனில் ஹமாம் அல்-ஹமாமி விமானம் இயக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ஃபிளைதுபை நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக அவா் பணியாற்றியுள்ளாா்.

தங்களுடன் தூதரக உறவுகள் இல்லாத நாடுகளின் விமானிகளை தங்கள் நாட்டுக்கு இயக்கப்படும் விமானங்களில் பணியமா்த்தக் கூடாது என வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல்-ஓமன் இடையே தூதரக உறவுகள் இல்லாத நிலையில், அந்த நாட்டைச் சோ்ந்த விமானியை ஃபிளைதுபை நிறுவனம் அனுமதித்து எப்படி? என்ற கேள்வியை இஸ்ரேல் எழுப்பியுள்ளது. இதில் தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதனிடையே, துணை விமானியின் நோக்கங்கள், தொடா்புகள் குறித்த விசாரணையை யுஏஇ விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட விமானத்தில் பயணித்தவா்கள், ஊழியா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்களை இஸ்ரேலிடம் யுஏஇ பகிா்ந்துகொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.