இஸ்ரேல் நாட்டில் ஃபிளைதுபை விமானத்தை மோத முயற்சியா? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்
இஸ்ரேல் நாட்டின் மீது ஃபிளைதுபை விமானத்தை விமானி ஹமாமி மோத முயற்சித்தது குறித்து...
விமானி ஹமாமி | இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - கோப்புப் படம்
ஃபிளைதுபை விமானத்தை இஸ்ரேல் நாட்டில் மோதித் தகர்க்க முயன்றதாக துணை விமானி ஹமாம் அல் ஹமாமி வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு புதன்கிழமை (செப். 30) காலை 174 பயணிளுடன் சென்ற விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி ஹமாம் அல் ஹமாமி கத்தியால் குத்தினார்.
கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி, சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய ஹமாம் அல் ஹமாமி சிறைப்பிடிக்கப்பட்டு, அவரிடம் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஃபிளைதுபை விமானத்தை இஸ்ரேல் நாட்டில் மோதித் தகர்க்க முயற்சித்ததாக ஹமாமி வாக்குமூலம் அளித்திருப்பதாக இஸ்ரேலிய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.
இஸ்ரேல் செல்லும் விமானம் என்பதால்தான் ஃபிளைதுபை விமானத்தைத் தேர்வு செய்ததாகவும், பென் குரியன் விமான நிலைய முனையம் அல்லது வேறொரு விமானத்தின் மீது மோதித் தகர்க்கத் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை, இஸ்ரேலை அடைய முடியாவிட்டாலும் ஜோர்டான் அமெரிக்க தளம் அல்லது டெல் அவிவ் கட்டடத்தை மோதவும் திட்டமிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஜூலையிலேயே இதுபோன்ற ஒரு முயற்சிக்குத் திட்டமிட்டு, பின்னர் அதனைக் கைவிட்டதாகவும் ஹமாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹமாமியின் சமூக ஊடகப் பக்கங்கள் குறித்தும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஹமாமியின் எக்ஸ் பக்கத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பதிவுகள் பதிவிட்டிருப்பதாகவும், அவற்றில் பல பதிவுகள் பெண்கள் வேலைக்குச் செல்வதை எதிர்ப்பதாகவும், ஹிஜாப் அணிவதை ஆதரவளிப்பதாகவும் இருக்கின்றன.
சௌதி பெண்களைத் தொடர்புகொள்வதற்காக சிரியா மற்றும் லெபனான் நாட்டவராக தன்னைக் காட்டிக்கொள்ள ஒரு போலிக் கணக்கைத் தொடங்கியதாகவும் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
தீவிரவாத இணையதளங்களை ஹமாமி தொடர்ந்து பார்த்து வந்ததாகக் கூறி, அவர் விமானம் ஓட்ட ஓமன் ஏர் நிறுவனம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, ராயல் ஏர் மரோக் நிறுவனத்தில் சேரவும் அவர் முயன்றுள்ளார். இறுதியாக ஃபிளைதுபை நிறுவனத்தில் கடந்த பிப்ரவரியில் வேலையில் சேர்ந்தார்.
Summary
Co-pilot Hamam al-Hamami plotted plane crash alone, claims report
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






