
பிளேக் நோய்க்கு பலியான ரஷிய பெண் ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்
பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்...

பிளேக் பாதிப்பு
ரஷியாவின் ஷெலேகேவ்வில் அமைந்துள்ள பிளேக் நோய் எதிர்ப்பு ஆராய்வுக் கூடத்தில் உள்ள குழாய் வெடித்த நிலையில், ஆய்வில் ஈடுபட்டு வந்த 28 வயது ஆய்வாளர் பிளேக் பாதித்து பலியான சம்பவம் அந்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பிளேக் நோய் எதிர்ப்பு ஆய்வுக் கூட ஆய்வாளர், பிளேக் நோய் பாதித்து பலியான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
தார்யா ஷிபிலோவா என்ற ஆய்வாளர், பணியின்போது பிளேக் டெஸ்ட் டியூப் வெடித்து அதிலிருந்து உயிர்க்கொல்லியான பிளேக் தொற்று, பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார்.
தன்னுடைய ஆய்வுக்கூட பரிசோதனைக்காக உயிருள்ள பிளேக் பாக்டீரியாக்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக அந்த டெஸ்ட் டியூப் உடைந்துவிட்டதாக மருத்துவ ஊழியர்களிடம் கூறியிருக்கிறார்.
செப்.29ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த தார்யா, அக். 1ஆம் தேதி இறந்துவிட்டார். இவருடன் தொடர்பில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிளேக் அச்சுறுத்தல்
இர்குட்ஸ்க் மாகாணம் முழுவதும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளேக் என்பது மிகவும் மோசமான பாக்டீரியா என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், பயப்பட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுளள்து.
பிளேக் நோய் என்பது?
பிளேக் மிகவும் எளிதில் பரவக்கூடியது. இது, நோய்த்தொற்றுள்ள பூச்சிகளின் கடி மற்றும் உயிரினங்களிடமிருந்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, நுரையீரல் பிளேக் என்றும் அழைக்கப்படும் நிமோனியா பிளேக், மிகவும் ஆபத்தானது.
இந்த நோய் தொற்று 24 மணி நேரத்தில் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிவிடும், மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, இருமல் போன்றவை இதன் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. முதல் 24 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
Summary
Russian researcher dies of plague test tube exploded Shocking details
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






