பிகார்: எரிவாயு கசிவு காரணமாக குழாய் வெடித்து ஒருவர் பலி, 6 பேர் காயம்!
பிகாரில் எரிவாயு கசிவு காரணமாக குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது பற்றி....

பிகாரில் சம்பவம் நடைபெற்ற இடம்.
பிகாரில் எரிவாயு கசிவு காரணமாக குழாய் வெடித்து ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால் திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் அதிர்வால் நான்கு அடுக்குமாடி கட்டடம் பலத்த சேதமடைந்ததுடன், 100 மீட்டர் சுற்றளவில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துச் சிதறின.
கோபர்சாஹி-தும்ரி பகுதியில் நிலத்தடியில் இருந்த பிஎன்ஜி எரிவாயு குழாயின் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டும் பணியின்போது இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் இந்த வெடி சப்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் சிலர் கூறினர்.
முசாஃபர்பூர் மாவட்ட ஆட்சியர் குமார் கௌரவ் கூறுகையில், "பிஎன்ஜி எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால் நிகழ்ந்த இந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார், ஆறு பேர் காயமடைந்தனர்" என்று தெரிவித்தார்.
"காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், பொறுப்பானவர்களைக் கண்டறியவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
நான்கு அடுக்குமாடி கட்டடம் பலத்த சேதமடைந்ததாகவும், 100 மீட்டர் சுற்றளவில் இருந்த பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வெடி விபத்தில் பல வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த வெடி விபதைத் தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது. தீயணைப்புப் படை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுக்கள் இணைந்து செயல்பட்டு, அந்தத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன.
Summary
One person died and at least six were injured following an explosion in a leaked gas pipeline on Monday, shockwaves from which severely damaged a four-storey building and shattered windowpanes within a 100-metre radius, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


