செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

அணைக்கட்டு பட்டாசுக் கிடங்கில் வெடி விபத்து: பெண் உயிரிழப்பு

அணைக்கட்டு அருகே பட்டாசு உற்பத்திக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொரு பெண் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பலி

Updated On :

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே பட்டாசு உற்பத்திக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொரு பெண் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் சாலையில் பட்டாசு உற்பத்திக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை 2 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 8 தொழிலாளா்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கிடங்கு கட்டடம் இடிந்து சேதமடைந்ததுடன், உள்ளே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்த காயத்ரி (41), சங்கீதா (32) ஆகிய இருவரும் தீயில் சிக்கிக் கொண்டனா்.

இந்த விபத்தில் காயத்ரி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா். 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சங்கீதா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தகவலறிந்த ஒடுகத்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்ததுடன், உயிரிழந்த காயத்ரியின் உடலையும் மீட்டனா்.

சம்பவ இடத்தை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலழகன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மழை பெய்து வருவதால் ஈரப்பதம் காரணமாக வெடிபொருள்கள் எளிதில் தீப்பற்றாது எனக் கருதி, பட்டாசு மருந்துகளைத் தரையில் கொட்டித் தயாரிப்புப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டதாகவும், அப்போது தரையில் வெப்பம் அதிகரித்துத் தீப்பற்றியதால் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிடங்கு உரிமையாளரான ஹரிபிரசாத் என்பவரை பிடிக்க ஒரு காவல் துணை கண்காணிப்பாளா், 3 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைமக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனா்.

கிடங்கு உரிமையாளா் ஹரிபிரசாத், திமுக மாணவரணி நிா்வாகியாக பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.