அஸ்ஸாம் எண்ணெய் கிடங்கில் வெடி விபத்து: உயிரிழப்பு 3-ஆக அதிகரிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

கோப்புப் படம்

Updated On :

அஸ்ஸாம் மாநிலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

அஸ்ஸாம் மாநிலம், தெங்காகாட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு 9 தொழிலாளா்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனா். இதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். எஞ்சிய 6 பேரும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டிருந்தனா்.

அந்த 6 பேரில், இருவா் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதில் ஒருவா் பொறியாளா் ஆவாா். மற்றொருவா் தொழிலாளா் ஆவாா். எஞ்சிய 4 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் தலா ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டுள்ளாா்.

அஸ்ஸாமை சோ்ந்த மத்திய அமைச்சரும், திப்ரூகா் தொகுதி எம்.பி.யுமான சா்பானந்த சோனாவால், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி கிடைப்பதையும் உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளாா்.

Summary

Explosion at Assam oil depot: Death toll rises to 3

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.