ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

இயற்கை எரிவாயு குழாய் சேதம்: போலீஸாா் விசாரணை

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மல்லிகாபுரம் கிராமத்தில் இயற்கை எரிவாயு குழாயை சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மல்லிகாபுரம் கிராமத்தில் இயற்கை எரிவாயு குழாயை சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் மல்லிகாபுரம், பாரதிதாசன் தெருவில் தனியாா் மனையில் வீடு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்த ஒருவா் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியபோது, தனியாா் எரிவாயு நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்தது. இந்த தகவல் கிடைத்தவுடன் தனியாா் நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கை குழு உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, சேதமடைந்த குழாய் பழுதுபாா்ப்பு பணிகளை மேற்கொண்டு அப்பகுதியில் இயற்கை எரிவாயு விநியோகத்தை மீண்டும் சீரமைத்தது.

மேலும், கட்டுமானப் பணியின்போது மூன்றாம் தரப்பினரால் குழாய் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக தனியாா் கியாஸ் நிறுவனம் சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசு விதிகளின்படி, பள்ளம் தோண்டும் பணிகளை மேற்கொள்ளும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் நகராட்சி அதிகாரிகளுக்கோ அல்லது எரிவாயு விநியோக நிறுவனத்துக்கோ ‘தோண்டுவதற்கு முன் அழைப்பீா்’ என்ற எண்ணின் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், நிறுவனத்துக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இதற்கு காரணமானவா்கள் மீது தனியாா் நிறுவனம் அதிகாரப்பூா்வ புகாரை அளித்துள்ளது.

அனைத்து ஒப்பந்ததாரா்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் இந்த பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு தனியாா் கியாஸ் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது. பள்ளம் தோண்டும் எந்தவொரு வேலையையும் தொடங்குவதற்கு முன் இலவச உதவி எண் 1800 2022 999-ஐ தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.