முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!
இன்றைய பங்குச் சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிலைபெற்றது.

கோப்புப் படம்
மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பெரும் விற்பனையால், ஐந்து நாள் ஏற்றத்திற்குப் பிறகு, இன்றைய சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இந்திய ரூபாயின் மதிப்புக்கு சாதகமாக அமையவில்லை. உலகப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவால், அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 92.47 ஆக தொடங்கி ரூ. 92.41 ஆக உயர்ந்ததும், பிறகு குறைந்தபட்சமாக ரூ. 93.11 ஐ தொட்டது. வர்த்தக முடிவில், முந்தைய நாள் முடிவிலிருந்து 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, தொடர்ந்து 5 வது அமர்வாக ரூபாய் வலுப்பெற்று, டாலருக்கு நிகரான 70 காசுகள் உயர்ந்து ரூ. 92.62 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக ரூ. 93 என்ற நிலையை மீண்டும் கடந்தது.
Summary
The rupee lost 30 paise to settle at 92.92 against the US dollar on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


