டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 94.71ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 94.71 ஆக நிலைபெற்றது.

மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட அதீத உயர்வை தொடர்ந்து வெளிநாட்டு நிதி வரவால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 94.71 ஆக நிலைபெற்றது.
இருப்பினும், அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்ததால், ரூபாயின் மதிப்பு மேலும் உயர்வது கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 94.68 ஆக வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் ரூ. 94.60 என்ற நிலையை எட்டிய நிலையில், இறுதியில் ரூ. 94.71 ஆக முடிவடைந்தது. இது அதன் முந்தைய நாள் முடிவை விட 13 காசுகள் உயர்வாகும்.
இதற்கு முந்தை நாள் திங்கள்கிழமை அன்று ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 94.84 என்ற நிலையில் முடிவடைந்த நிலையில், அதற்கு முந்தைய வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்று ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்ந்திருந்தது.
Summary
The rupee settled 13 paise higher at 94.71 against the US dollar on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


