டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 96.72 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 96.72 ஆக நிறைவு.

கோப்புப்படம் - ANI
மும்பை: அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட லேசான சரிவு உள்ளிட்டவைக்கு ஏற்ப, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 96.72 ஆக நிறைவடைந்தது.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, டாலர் பலவீனமடைந்ததாகவும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாகவும் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96.74 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் போது ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 96.51 வரை சென்று பிறகு குறைந்தபட்சமாக ரூ. 96.77 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் நிலையை விட 16 காசுகள் உயர்ந்து ரூபாய் மதிப்பு ரூ. 96.72 ஆக நிறைவடைந்தது.
நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 96.88 ஆக நிறைவடைந்திருந்தது.
Summary
Rupee appreciated 16 paise to close at 96.72 against the dollar on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


