
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ. 95.58 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ. 95.58 ஆக நிலைபெற்றது.

மும்பை: உலகளாவிய சூழலில், அமெரிக்கா-ஈரான் மோதலைத் தீர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பாலும் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது. இதன் விளைவாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ. 95.58 ஆக நிலைபெற்றது.
துறைமுக மீதான முற்றுகையை அமெரிக்கா நீக்கி, அப்பகுதியில் உள்ள ராணுவ அழுத்தத்தைக் குறைத்தால், ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை ஈரான் திறந்துவிடும் என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சரிந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.75 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு வலுவடைந்து, வர்த்தகத்தின் இடையே ரூ. 95.55 என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், ரூபாயின் மதிப்பு ரூ. 95.58 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 20 காசுகள் அதிகமாகும்.
முன்னதாக நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூபாய் மதிப்பு ரூ. 95.78 ஆக நிலைபெற்றது.
Summary
The rupee appreciated 20 paise to close at 95.58 against US dollar on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






