பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய்

Published On :

மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், உலகளாவிய சூழல் மேம்பட்டதால் கச்சா எண்ணெய் விலை சரிந்தன. இதன் விளைவாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிலைபெற்றது.

அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை குறித்த நம்பிக்கையால் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், இந்திய ரூபாய் வலுவடைந்ததும், உள்நாட்டுச் சந்தையின் சாதகமான போக்கு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் குறைந்ததும் இந்திய ரூபாயின் மதிப்பை உயர செய்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.86 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கி, பிறகு வலுவடைந்து வர்த்தகத்தின் இடையே ரூ. 95.72 என்ற அளவை எட்டியது. வர்த்தக முடிவில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.81 ஆக நிலைபெற்றது. இது வர்த்தகத்தின் முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 15 காசுகள் அதிகமாகும்.

முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.96 ஆக இருந்தது.

Summary

The rupee appreciated 15 paise to close at 95.81 against the US dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.