பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வாரத்தின் தொடக்க நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 564.03 புள்ளிகள் உயர்ந்து 74,858.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 67.90 புள்ளிகள் அதிகரித்து 23,414.30 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :

மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு, புதிய வெளிநாட்டு நிதி வரவு மற்றும் ஆசியப் பங்குகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கு ஆகியவற்றால், பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ், காலை நேர வர்த்தகத்தில் 448.32 புள்ளிகள் உயர்ந்து 74,743.28 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 50.3 புள்ளிகள் உயர்ந்து 23,396.70 ஆக வர்த்தகமானது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 564.03 புள்ளிகள் உயர்ந்து 74,858.99 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 67.90 புள்ளிகள் அதிகரித்து 23,414.30 புள்ளிகளாக நிலைபெற்றது.

தொடர்ந்து 4வது நாளாக நிஃப்டி உயர்ந்து 23,414.30 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள் 4.11 சதவீதம் உயர்ந்தன. டெக் மஹிந்திரா, ஐடிசி, இன்டர்குளோப் ஏவியேஷன், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, எச்.சி.எல் டெக் மற்றும் ட்ரென்ட் உள்ளிட் பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் பவர் கிரிட் ஆகிய பங்குகள் சரிந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ. 599.54 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை நேர்மறையான நிலையில் வர்த்தகமானது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க சந்தை உயர்வுடன் முடிவடைந்தன.

ஆரம்ப வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமானது. தென் கொரியாவின் கோஸ்பி 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த நிலையில், ஜப்பானில் தேசிய பொது விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 2.25 சதவீதம் சரிந்து 101.5 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Market benchmark indices Sensex and Nifty climbed up on Monday amid cooling crude oil prices, fresh foreign fund inflows.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.